இந்த வலைப்பதிவில் தேடு

இளநீர் எந்த நேரத்தில் குடித்தால் நல்லது தெரியுமா ?

சனி, 11 நவம்பர், 2023

 




கலப்படம் செய்ய முடியாத ஒரு பொருள் என்றால் அது இளநீர் தான். மூன்று வயது குழந்தையிலிருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம்


இளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு.அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்" என்றும் சிலர் கூறுகிறார்கள்.


இளநீரை எந்த நேரத்தில் குடித்தால், அதன் முழுப் பயனை அனுபவிக்க முடியும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.


காலையில் தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் லாரிக் அமிலம், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைவு பிரச்னையிலிருந்து விடுபடுதல் போன்ற பலன்கள் கிடைக்கும்.



இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். கர்பிணி பெண்கள், இளநீரை குடித்தால், நீர்ச்சத்து குறைபாடு பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.


உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு முன்போ அல்லது பின்போ இளநீரை குடிக்கலாம். இதனால், உடற்பயிற்சி செய்வதன் பலனை அதிகரிக்கச் செய்கிறது. அதாவது நீங்கள் எந்த காரணத்திற்காக என்ன உடற்பயிற்சி செய்கிறேர்களோ, அந்த பலன், வித்தியாசம், வெகு விரைவில் தெரியும்.



மதிய உணவுக்கு முன்போ அல்லது பின்போ இளநீர் குடிப்பதால், உடற்சூடு தணிக்கப்படும். மேலும், செரிமான சிக்கலை உடனடியாக சரிசெய்யும்.

இனிமையான இரவு உறக்கத்தை பெறுவதற்கும் இளநீர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. நமது இதயத்துடிப்பு அதிகம் இல்லாமல், நார்மலாக சாந்தமாக இருக்கச் செய்கிறது. இதனால், அன்றாட நமக்கு இருக்கும் எரிச்சல், மனச்சோர்வு, மன அழுத்தம் குறையும் .


யார் குடிக்க கூடாது?

ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, உடனடியாகச் சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent