நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் அவர்களுடைய நலன் கருதி விரைவில் ஜூன் 19 முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது.
பொது தேர்வு எழுத மாணவர்கள் கட்டாயமாக துணை தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இந்த துணை தேர்வில் எக்கச்சக்கமான மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுடைய வாழ்க்கை பாதிப்படைய கூடாது என்பதற்காக ஜூலை 14ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் சிறப்பு மேலாண்மை கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத, துணை தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் கலந்து கொள்ளாத மாணவர்களுடைய பெற்றோரை நேரில் அழைத்து உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக