இந்த வலைப்பதிவில் தேடு

பணி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு மாணவர்களின் காஸ்ட்லி பரிசு

திங்கள், 24 ஜூலை, 2023

 




திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராமன். இவர் நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றார். இவரிடம் பயின்ற மாணவர்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உயர் பொறுப்புகளில் உள்ளனர். 


ஆசிரியர் ராமன் பணி ஓய்வு பெறும் தகவலை அறிந்த முன்னாள் மாணவ, மாணவிகள் தற்சமயம் பயின்று வரும் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆலங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பாராட்டு விழாவை நடத்தினர். 


இந்த விழாவில் தங்களுக்கு அறிவுப்பாதையை காட்டிய ஆசிரியர் ராமனுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான டூவீலர் ஒன்றை பரிசாக வழங்கி மாணவர்கள் அசத்தினர். மேடையில் கண்கலங்கி நின்ற ஆசிரியர் ராமனை, கிராம மக்களும் மாணவர்களும் கண் கலங்கியபடி வழியனுப்பி வைத்தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent