இந்த வலைப்பதிவில் தேடு

தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்தது

புதன், 26 ஜூலை, 2023

 

அரசுப்பள்ளிகளைக்காட் டிலும் கல்வித்தரத்தில் தனியார் பள்ளிகள் சிறந்தது என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளிலும் கல்வித்தரம் குறைந்துவிட்டது. 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2-ம் வகுப்பில் போடும் வகுத்தல்கணக்குக் கூட தெரியவில்லை என்ற வேதனையான செய்தியைத் தான் கேட்க முடிகிறது. இந்தியாவில் 12 கோடிக் கும் மேற்பட்டமாணவர்கள் தனியார் பள்ளிகளில் தான் பயில்கிறார்கள். 


கிராமப்புற பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் 60 சத வீதம் பள்ளிகளில் 5-ம் வகுப்பு மாணவர்கள் சாதாரண வகுத்தல் கணக்கைக் கூடபோடமுடியாமல் திணறுகிறார்கள். 35 சதவீத கிராமப்புற தனியார் பள்ளிக ளில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்கள், 2-ம் வகுப்பு கணக்குப் பாடத்தைக்கூட சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்


தனியார் பள்ளிகளில் பயிலும் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் 20 சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். 8 முதல் 11 வயது வரை உள்ளமாணவர் களில் 56 சதவீதம் பேர் 2-ம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் அடிப்படை பாடத் தைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent