இந்த வலைப்பதிவில் தேடு

Pharma D, Nursing பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் வழியாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

திங்கள், 17 ஜூலை, 2023

 



பார்ம் டி மற்றும் செவிலியர் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. 


தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உயர்கல்வி பயில்வதற்காக மாணவர்கள் கல்லூரியில் சேர தயாராகி வருகின்றனர். ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கி விட்டது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கைவிரைவில் தொடங்க உள்ளது.


குறிப்பாக மருத்துவப்படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப் படிப்புகளில் சேர கலந்தாய்வு பட்டியல் நேற்று வெளியானது. இந்த நிலையில் துணை மருத்துவ படிப்புகளான பார்ம் டி மற்றும் செவிலியர் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இணையதளம் வழியாக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 


தமிழகத்தில் பார்ம் டி படிப்பிற்கு 24 கல்லூரிகளில் 720 இடங்களும், செவிலியர் படிப்பிற்கு 25 கல்லூரிகளில் 2060 இடங்களும் என மொத்தம் 2780 இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பபட உள்ளது.


இது குறித்த மருத்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2023 – 2024ம்‌ கல்வி ஆண்டில்‌ பார்ம் டி மற்றும் செவிலியர் மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இணையதளம் வழியாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. 


அதன் படி, பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆன்லைனில் மூலம் இன்று முதல் ஜூலை 26ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent