திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள் :224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
விளக்கம்:
இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது கேட்பவர் முகம் மலர்ச்சி அடையும்வரை இருப்பதே அளவு.
பழமொழி :
All is well that ends well
ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
பொன்மொழி :
வெற்றி உன்னிடம்..! கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே.. அது உன்னை கொன்றுவிடும்.. கண்ணை திறந்து பார் நீ அதை வென்று விடலாம்..!
- டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்
பொது அறிவு :
1. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் யார்?
விடை: சுகுமார் சென்
2. இந்தியா வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?
விடை: டுவைட் டி. ஐசனோவர்
English words & meanings :
table-talk -light conversation spoken at the dining table மேசையைச் சுற்றியமர்ந்து அளவளஆவஉதல்: umpteen - a large number பெரும் எண்ணிக்கை
ஆரோக்ய வாழ்வு :
சீரகம். -சர்க்கரை நோயாளிகளின் இரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் பொழுது சீரகத்தை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்திக்கிறது.
ஜூலை 26
ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களின் பிறந்தநாள்
ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.
நீதிக்கதை
இரண்டாம் உலக போரின் போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசி தாக்கியது. இதனால் பல லட்சகணக்கான மக்கள் இறந்தனர். இலட்சகணக்கானோர் அணுக்கதிர்வீச்சின் காரணமாக பலவித நோய்களுக்கு உட்பட்டனர்.
அந்த இலட்சக்கணக்கானவர்களில் ஒருத்தி தான் ஜப்பானின் ஹிரோஷிமாவைச் சேர்ந்த இரண்டு வயது நிரம்பிய சிறுமி சடகோ ஸசாகி. பாதிப்பின் தீவிரத்தை அறியாத ஸசாகி மகிழ்ச்சியாகவே தனது பள்ளி வாழ்கையை அனுபவித்தாள். வருடங்கள் ஓடியதே தெரியாத ஸசாகி ஏழாம் வகுப்பு படித்துகொண்டிருந்தாள். பள்ளியின் சிறந்த தடகள வீராங்கணையில் ஒருத்தியாக விளங்கிய ஸசாகியின் கனவு ‘’ஒரு நல்ல உடற்பயிற்சி ஆசிரியராக வேண்டும்’’என்பதாக இருந்தது .
திடீரென ஒருநாள் பள்ளியில் அவள் மயங்கி விழவே, அவளை மருத்துவமனையில் சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் ‘’லுயுகேமியா’’ என்ற இரத்தபுற்றுநோயால் பாதிக்கபட்டுள்ளதை கூறினார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். அதுவரையில் மகிழ்ச்சியுடன் தன் வாழ்வில் இருந்த ஸசாகி தனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி நினைத்து மிகவும் பயந்து அழுதாள்.
மருத்துவமனையில் நாட்கள் கழிந்த போது, ஒரு நாள் நலம் விசாரிக்க ஸசாகியின் நெருங்கிய தோழி ஒருத்தி தன் கைகளில் சில காகித கொக்குகளை கொண்டுவந்தாள். பல வருடங்களாக ஜப்பானில் கொக்குகள் புனிதத்தின் அடையாளமாக விளங்குகின்றன. நோயுற்ற ஒருவர்,1000 காகித கொக்குகளை உருவாக்கினால் அவர் உடல்நலம் பெறுவார்கள் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆகவே நீ 1000 காகித கொக்குகளை உருவாக்கு என அன்புக் கட்டளை இட்டுச் சென்றாள்.ஸசாகி காகித கொக்குகளை உருவாக்க முடிவு செய்தாள். நோயின் தீவிரத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட அவள் காகித கொக்குகளைச் செய்வதில் விடாமுயற்சியுடன் இருந்தாள். இதில் ஒரு கட்டத்தில் அந்தக் காகிதக் கொக்குகளைச் செய்வதற்கு காகிதங்கள் தீர்ந்து விடுகின்றன. இதனைத் தொடர்ந்து தனக்கு மருந்துகள் எழுதப்பட்ட மருந்துச்சீட்டில் காகித கொக்குகளைச் செய்யத் தொடங்கிறாள் ஸசாகி.
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட காகித கொக்குகளை உற்சாகமாக உருவாக்கிய போது ஓரளவு உடல் நலம் பெற்றாள். ஆகவே மருத்துவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். வீட்டுக்குச் சென்ற ஒரு வாரத்தின் முடிவில் மீண்டும் நோய்வாய்பட்டாள். முன்பை விட மிக அதிகமான வலியும், வேதனையும் கூடியபோது கூட நம்பிக்கையை தளரவிடாமல் அவள் உருவாக்கிய காகித கொக்குகள் மொத்தம் 644.
அவள் இறப்புக்கு பின் அவளுடைய நண்பர்கள் மீதமுள்ள காகித கொக்குகளை செய்து முடித்து அவளுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்றினர். ஸசாகியின் இறப்புக்குப் பின் மூன்று வருடங்களுக்கு பிறகு 1958 மே 5-ம் தேதி ஹிரோஷிமா அமைதி பூங்காவில் அவளுக்கென நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. அவளின் நினைவு சின்னம் இன்றளவும், நமக்கு உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கிறது.இறக்கும் தருவாயில் கூட ஸசாகி தன்னுடைய விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கைவிடவில்லை. உண்மையில் நம் அனைவருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் தவிர்க்க இயலா வருத்தங்கள்,பிரச்சனைகள் இருக்கும். அனைத்தையும் இழந்தாலும் நம் வாழ்வில் நாம் இழக்கக்கூடாது விடாமுயற்சி, தன்னம்பிக்கை மட்டும்தான். அனைத்தையும் இழந்தாலும் நம்மிடம் உயிர் உள்ளது.
இன்றைய செய்திகள் - 26.07.2023
*ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக சென்ற சந்திராயன்-3... அடுத்து வருவது தான் முக்கியமான கட்டம் - இஸ்ரோ தகவல்.
*எஸ்.டி. பட்டியலில் தனுவர், தனுஹர் சமூகங்கள். மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்.
*பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
*மோட்டார் சைக்கிள் பயன்பாட்டில் உலகில் இந்தியா முதலிடம்.
*மகளிர் உலகக் கோப்பை கால்பந்து- தென்கொரியாவை வீழ்த்தியது கொலம்பியா.
*5வது ஆசஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு.
Today's Headlines
*Chandrayaan-3 successfully entered the fifth orbit... Next is the important step - ISRO information.
* ST. Danuwar and Danuhar communities in the list. Passage of the bill in Rajya Sabha.
* Release of water from Pillur Dam: Flood warning for Bhavani riverside area.
*India is number one in the world in motorcycle usage.
*Women's World Cup Football- Colombia defeated South Korea.
*5th Aces Test: England vs Australia squad announced.
Prepared by
Covai women ICT_போதிமரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக