இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 28.07.2023

வெள்ளி, 28 ஜூலை, 2023

 



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை


குறள் :226

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.


விளக்கம்:

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் கருவூலமாகும்.


பழமொழி :

All things come to those who wait


பொறுத்தவர் பூமி ஆள்வார்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.


 2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.


பொன்மொழி :


இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.


டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம்


பொது அறிவு :


1. முதல் பரம் வீர் சக்ரா யாருக்கு வழங்கப்பட்டது?


விடை: மேஜர் சோம்நாத் சர்மா


2. உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட(14 நாடுகள்)நாடு எது?

விடை: சீனா


English words & meanings :


 vague - uncertain, unclear meaning. தெளிவற்ற.waver - moving here and there without strength. நிலை இன்றி தள்ளாடு

ஆரோக்ய வாழ்வு :


சீரகம் -நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தும்.


ஜூலை 28


உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்




உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.[1]


உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


உலகக் கல்லீரல் அழற்சி நாள்

உலகக் கல்லீரல் அழற்சி நாள் (World Hepatitis Day), ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.கல்லீரல் அழற்சி நோய்களுக்கான அறிகுறிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நாள் உலக சுகாதார அமைப்பால் (WHO) ஏற்படுத்தப்பட்டது


நீதிக்கதை


பல முறை யோசிக்கனும்

நரி ஒன்று தாகத்தால்  தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்வது? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. 


உடனே வாளி 'விர்'ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. 'எப்படி வெளியேறுவது' என்று யோசிக்கத் தொடங்கியது. 'மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால் தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?' நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. 


அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதைக் கண்டது. “அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?" எனக் கேட்டது. "நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்" என்றது நரி. 


ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி 'சரசர'வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது. நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது."நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்". என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது. பாவம் ஓநாய்.! ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.


இன்றைய செய்திகள் - 28.07.2023


*டொயோட்டாவின் எர்டிகா வெர்ஷன் -  விரைவில் இந்தியா வரும் லோ பட்ஜெட் 7 சீட்டர்.


*பாரம்பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய 3 விவசாயிகளுக்கு விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்- முதல்வர்.


*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கலந்தாய்வு 3000 பேர் குவிந்தனர்.


*சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.


*ஜெர்மனி ஹாக்கி தொடர்: இந்திய ஆண்கள் ஜூனியர் அணி அறிவிப்பு.


*பாகிஸ்தானை சேர்ந்த சவுத் ஷக்கிள் முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் எடுத்ததன் மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திராத புதிய சாதனை படைத்துள்ளார்.


Today's Headlines


*Toyota's Ertiga version,low budget 7-seater coming to India soon.


 * Awarded and cash prizes are given to 3 farmers who excelled in traditional rice production by TN Chief Minister.


 * 3000 students were gathered for medical counseling for the government school students.


 *The price of crude oil continues to decrease in the international market.


 *Germany Hockey Series: Indian Men's Junior Team was Announced


 *Pakistan's South Shackle scored a double century in the first Test and 57 runs in the second Test, setting a new record in the 146-year history of cricket.


 Prepared by


Covai women ICT_போதிமரம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent