இந்த வலைப்பதிவில் தேடு

ஆகஸ்ட் 3 - உள்ளூர் விடுமுறை அளிக்க கோரிக்கை

புதன், 2 ஆகஸ்ட், 2023

 




ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஏற்கனவே நாமக்கல் , தருமபுரி , சேலம் , ஈரோடு திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்த நிலையில், 


ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ம்தேதி திருச்சி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை வை்த்துள்ளது.


திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது.


இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-


தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய தேவகைளுக்கும், 25 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குவது காவிரி ஆறு. இத்தகைய சிறப்புக்குரிய காவிரி ஆற்றை தங்களது தாயாக கருதி ஆடிப்பெருக்கு அதாவது ஆடி பதினெட்டாம் நாள் அன்று காவிரி கரையில் பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்துவது வழக்கம். ஆடி பெருக்கு விழா வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற இருப்பதால்  காவிரி கரையில் உள்ள திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்தால் மக்கள் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட வழி பிறக்கும்.


கொரோனா பரவில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று விழா கொண்டாட அனுமதிக்கப்படாமல் உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படாமல் இருந்தது. எனவே நடப்பாண்டாவது காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட ஆகஸ்டு மூன்றாம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கும்படியும் அதற்கு ஈடாக வேறு ஏதாவது ஒரு நாளை வேலை நாளாக அறிவித்து உதவும்படியும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent