பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர் சேர்க்கையை, 31ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளும்படி, பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை மார்ச்சுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை சி.பி.எஸ்.இ., வாரியம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., சார்பில் அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கை:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 2024ல் குறித்த நேரத்தில் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பள்ளிகள் ஒத்துழைக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், மாணவர் சேர்க்கை, பாடப்பிரிவு மாற்றம், பள்ளி மாற்றம் உள்ளிட்ட பணிகளை, 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மாணவர்கள் விபரங்களை பதிவு செய்து, சேர்க்கைக்கு அனுமதி பெறுவது போன்ற பணிகளையும் தாமதமின்றி முடித்தால் மட்டுமே, பொதுத் தேர்வை குறித்த நேரத்தில் முடிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக