மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கு 4% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் எனவும், ரூ.11,960 வரை சம்பளம் உயரக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு நான்கு சதவீதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஊழியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த சில நாட்களாக மத்திய அரசு ஊழியர்களுக்கு பணவீக்கம் காரணமாக மூன்று சதவீதம் மட்டுமே அகவிலைப்படி உயரும் என தகவல் வெளியான நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், அடிப்படை சம்பளம் ரூ. 26 ஆயிரம் பெறும் ஊழியர்களுக்கு ரூ.11,960 வரைக்கும் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், அடிப்படை சம்பளம் ரூ. 20000 பெரும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ரூ. 800 அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிவாரணமும் செப்டம்பர் மாதம் உயர்த்த இருப்பதாக தகவல் அறியப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக