இந்த வலைப்பதிவில் தேடு

ஆகஸ்ட் 9 - 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

 




ராணிப்பேட்டை மாவட்டம்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு ராணிப்பேட்டையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. ராணிபேட்டையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் ச.வளர்மதி உத்தரவு அளித்துள்ளார். ஆடி கிருத்திகையை முன்னிட்டு இரத்தினகிரி, திருத்தணி முருகன் கோயில்களுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள் என்பதால், மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.



திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) ஆடி கிருத்திகை விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 


அந்தவகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 9 அன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சேலம் மாவட்டம்

சேலத்தில் ஆக.3 மற்றும் ஆக.9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆக.3-ம் தேதியும், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆக.9-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது


“சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 09.08.2023, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.


இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டம் 1881(Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.


இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகின்ற 02.09.2023, சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது” என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent