இந்த வலைப்பதிவில் தேடு

'ஸ்கேல் அடி' - அரசுப் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

 

வீட்டு பாடங்களை சரியாக எழுதாத மாணவியரை, மர ஸ்கேலால் அடித்து காயப்படுத்திய ஆசிரியை மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.


வேலுார் அடுத்த இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக, ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கைச் சேர்ந்த தீபலட்சுமி, 45, பணிபுரிகிறார்.


சில நாட்களுக்கு முன், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் கொடுத்துள்ளார். அதை சில மாணவியர் சரியாக செய்யவில்லை.


இதில், அதிருப்தியடைந்த தீபலட்சுமி, நான்கு மாணவியரை மர ஸ்கேலால் அடித்தார். அதில், அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.


மாணவியர் தகவல்படி பெற்றோர், விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தனர். இதனால் தீபலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent