இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 03.08.2023

புதன், 2 ஆகஸ்ட், 2023

 



திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: ஈகை


குறள் :230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.


விளக்கம்:

.சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.


பழமொழி :

April showers bring forth May flowers

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே


இரண்டொழுக்க பண்புகள் :

1. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு தாழ்த்திக் கொள்ளாதே. 


2. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் நேரத்தில் ஒளி வீசுகின்றன. ஒன்றோடொன்று ஒத்து பார்ப்பதில்லை


பொன்மொழி :

ஒரு நண்பர் என்பவர் நீங்கள் நீங்களாகவே இருக்க முழு சுதந்திரத்தை அளிக்கும் ஒருவர். --ஜிம் மோரிசன்


பொது அறிவு :

1. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?


 விடை: வில்லியம் பென்டிக் பிரபு


2. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

விடை: லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்


English words & meanings :

 compensation - reparation இழப்பீடு; ancient - out moded பழமையான


ஆரோக்ய வாழ்வு :

சோம்பு : அஜீரணக் கோளாறுகளால் வயிற்றில் வாய்வுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இவர்கள் உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்


நீதிக்கதை

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.


இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே.. இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.


அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..


ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.


அதற்கு முனிவர், “மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.


“நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.


அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.


மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. “என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன .அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.


இன்றைய செய்திகள் - 03.08.2023

*மேகதாது அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் தொடக்கம் - 60 நாட்களில் முடிக்க கர்நாடக அரசு தீவிரம்.


*பொது பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது - அமைச்சர் பொன்முடி.


*35 முறை தோல்வி.... கடைசியில் வெற்றி .....மனம் தளராத முயற்சியால் ஐஏஎஸ் அதிகாரி ஆனார் ஹரியானாவை சேர்ந்த விஜய் வரதன். 


*அறநிலையத்துறை வேலைக்கு நேர்முகத் தேர்வு மூலம் எடுக்கப்படுபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்- அமைச்சர் அறிவிப்பு.


*சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி இன்று 3ஆம் தேதி தொடக்கம். அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு.


*ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்த உனத்கட்.


Today's Headlines

*Karnataka govt keen to start land surveying work for the construction of Meghadadu Dam - complete in 60 days.


 *Higher Education Department has the power to change the general curriculum - Minister Ponmudi.


 * Failed 35 times…. Success at last.....Vijay Varathan from Haryana became an IAS officer through relentless efforts.


 *Those who are selected through the interview for the Charitable Endowment Department will be made permanent - Minister notification.


 *Asia Cup Hockey will start today in Chennai.  Govt school students are arranged to visit free of cost

 *Unathkat broke the 27-year-old record in ODI cricket.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent