தமிழ் மொழி இலக்கியத் திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை செப்டம்பர் 20-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு திட்டத்தை தமிழக அரசு கடந்தாண்டு அறிமுகம் செய்தது.
இந்ததிட்டத்தின்படி அரசு அங்கீகாரம் பெற்றஅனைத்து பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 20-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், தேர்வுக் கட்டணமாக ரூ.50 இணையவழியில் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம்செலுத்திய பின்னர் எந்த திருத்தமும்செய்ய முடியாது என்று தேர்வுத் துறைசார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக