அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம், கல்விநிலையங்களில் சேர என பல்வேறு நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம், பிறப்புச் சான்றிதழை கல்வி நிலையங்களில் அனுமதி பெறுவது, வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற, திருமணத்தைப் பதிவு செய்வதற்கு, அரசு வேலை பெறுவது போன்ற பணிகளுக்கு தனி ஆவணமாக அடையாளன் சான்றிதழாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாடாளுமன்றத்தில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மசோதாவை தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவையிலும் 7ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக