தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு மற்றும் 14 உதவிபெறும் பி.எட் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை கல்வியியல் (பி.எட்) படிப்புக்கு 2,040 இடங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நடப்பாண்டு பி.எட் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக செ. 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500, எஸ்.சி./எஸ்.டி.பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும்.
கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம். இணைய வசதி இல்லதவர்கள், ‘இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநரகம், சென்னை–15’ என்ற பெயரில் செப். 1-ம் தேதிக்குப் பின்னர் பெற்ற வரைவோலை எடுத்து நேரடியாக செலுத்தலாம்.
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது, தாங்கள் சேர விரும்பும் கல்லூரிகளின் பட்டியலைக் குறிப்பிட்டு, சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். கல்லூரிகள் மற்றும் அதில் உள்ள இடங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதில் சிரமம் இருந்தால் 9363462070, 9363462007, 9363462042, 9363462024 ஆகிய எண்களில் காலை 10 முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் தொடர்புகொண்டு, உரிய வழிகாட்டுதல் பெறலாம். இவ்வாறு உயர்கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக