மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் கடந்த மாதம் 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது :
1 . மாணவர்களிடையே கூல் லிப் ( Cool Lip ) என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.
2. பள்ளி அருகே உள்ள கடைகளில் கூல் லிப் விற்கப்படுகிறதா என தகவல் தெரிந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலருக்கு போதைப்பொருள் விற்கப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும்
3. RBSK என்ற மருத்துவ குழு பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்தும் பொழுது மாணவர்களின் பற்களை பரிசோதனை செய்து, போதை பொருட்கள் பயன்படுத்தியதால் ஏற்படும் கரைகள் உள்ளதா என அறிந்து அம் மாணவர்களுக்கு தனியே உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். நம் மாணவர்களிடம் போதை பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை அறிந்து அது குறித்த தகவலை காவல் நிலையத்திற்கு புகார் தரப்பட வேண்டும். அவ்வாறு முறையில் அழிக்கப்பட்ட புகாரின் நகல்கள் முதன்மை கல்வி அலுவலர் அனுப்பப்பட வேண்டும்
4. பிரதிவாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டு கூட்டத்தின் பொழுது அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலம் போதி விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும்
5. போதை விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்
6. காவல்துறை சுகாதார துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து பாரதர் சாரணர் சாரணியர் நாட்டு நல பணி திட்டம் மாணவர்களை இணைந்து போதை விழிப்புணர்வு பேரணி பள்ளி அளவில் நடத்தப்பட வேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக