இந்த வலைப்பதிவில் தேடு

கல்வி உதவித்தொகைக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - பள்ளிக்கல்வித் துறை

வியாழன், 21 செப்டம்பர், 2023

 



கல்வி உதவித்தொகைக்கு இனி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.


பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம், உயர்கல்வி உதவித் தொகைக்கான, ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்கள், பள்ளி மாணவ - மாணவியருக்கு அமலில் உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 


இந்த உதவித்தொகையை மாணவர்கள் பெற, இனி ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக புதிய இணையதளம் துவங்கப்படும்.


மேலும், மாணவ - மாணவியரின் பெயரிலான வங்கி கணக்குக்கே, கல்வி உதவித்தொகை அனுப்பப்படும். எனவே, மாணவ - மாணவியரின் கல்வி உதவித்தொகையை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற, தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்கள் அதற்கான ஆவணங்களை தயார்படுத்த அறிவுறுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent