இந்த வலைப்பதிவில் தேடு

Shaala Siddhi - இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு

புதன், 13 செப்டம்பர், 2023

 

அரசு, உதவிபெறும் பள்ளிகளின் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து, பள்ளிக்கான தேவையை பகுப்பாய்வு செய்யும், சுயமதிப்பீட்டு பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தகவல்களை ஆய்வுப்பணிகளுக்காக பெற்று வருகிறது.


இந்த தகவல்களை, பள்ளிக்கல்வி சார்ந்த பல்வேறு ஆய்வுகள், நிதி சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் கடந்த 2016 முதல், அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இருந்து, மொத்த பரப்பளவு, கட்டடங்கள் எண்ணிக்கை, வகுப்பறை, கழிவறை, குடிநீர் அமைப்புகள், நுாலகம், விளையாட்டு உபகரணங்கள் எண்ணிக்கை, ஆய்வகம் முதல், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எண்ணிக்கை, மாணவர்களின் விபரங்கள் என, பள்ளி சார்ந்த அனைத்து தகவல்களும், ஷாலாஷித்தி என்ற திட்டத்தின் கீழ், இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.


பள்ளி சார்பில் அனைத்து வகை தகவல்களும், உள்ளீடு செய்தபிறகு, இணையதளத்தில் பகுப்பாய்வு செய்து, தர குறியீடு வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி சார்ந்த தகவல்களை, இம்மாதம் 30ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறுகையில், மத்திய அரசின் இணையதளத்தில் பள்ளிகள் சார்பில் உள்ளீடு செய்யும் தகவல்கள், உடனே பகுப்பாய்வு செய்து முடிவுகள் வெளியிடப்படும். இதில், பள்ளிக்கு கூடுதலாக தேவைப்படும் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதை நகலெடுத்து, பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.மேலும், இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மத்திய அரசு, பள்ளிகளுக்கு சில திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்கி வருகிறது. இப்பணிகளை, உரிய கால அவகாசத்திற்குள் விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, என்றனர். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent