இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி வேனில் தீ - 14 மாணவர்கள் தப்பினர்

வெள்ளி, 27 அக்டோபர், 2023

 



கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளி வேன் ஒன்று நேற்று காலை பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றது. 


இந்த பேருந்தில் 14 மாணவர்கள் இருந்தனர். பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது பள்ளி வேனின் முன்புறத்தில் இருந்து லேசான புகை ஏற்பட்டது. உடனே பேருந்தில் இருந்த மாணவர்களை ஓட்டுநர் பாதுகாப்பாக கீழே இறக்கினார். 


சிறிது நேரத்தில் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பள்ளி வேனின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent