இந்த வலைப்பதிவில் தேடு

கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை அறிவிப்பு - காற்றில் பறந்தது தேர்தல் வாக்குறுதி எண் 311

திங்கள், 30 அக்டோபர், 2023

 

அரசு பணியாளர்கள், தங்கள் பணிக் காலத்தில் கூடுதல் கல்வி தகுதி பெற்றால், அதற்கு ஏற்ப, ஒரு முறை ஊக்கத்தொகை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.


அரசு பணியாளர்கள் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை, மத்திய அரசின் வழிகாட்டு முறைகளின்படி, விரைவில் அறிவிக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்திருந்தார்.


அதன்படி, பிஎச்.டி., படிப்புக்கு 25,000 முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்புக்கு, 20,000 இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


அரசு ஊழியர், அவர் வகிக்ரும் பதவிக்கான அடிப்படை கல்வித் தகுதியைவிட கூடுதல் கல்வித் தகுதிக்கான படிப்பை, அவரது பணிக்காலத்தில் படித்து முடித்தால், அவருக்கு தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையானது அவரின் அடிப்படை சம்பளத்தில் 6 சத வீதம் ஒவ்வொரு மாதமும்,அவர் ஈம்பளத்தில் கூடுதலாக பணிக் காலம் முழுவதும் வழங்கப் படும். ஒருவர் பணிக்காலத்தில் அதியுட்சம் 2 முறை இதுபோல் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை பெற முடியும்.


அதரவது ஒரு பட்டதாரி ஆசிரியர் பி.எஸ்சி., பி.எட்., கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்துவிட்டு, பின்னர் அவரது பணிக் காலத்தில் கூடுதலாக எம்.எஸ்சி படித்து முடித்தால் அவர் பெறும் அடிப்படை சம் பளத்தில் 6 சதவீதம் வரை ஊதிய உயர்வு மக்கத்தொகையாக வழங்கப்படும். அந்த ஊதிய உயர்வு அவரது பணிக் காலம் முழுவதும் மாதம்தோறும் கிடைக்கும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent