இந்த வலைப்பதிவில் தேடு

ஆன்லைன் வகுப்பு - ரூ.4.93 கோடி வீண் செலவு - CAG அறிக்கை தகவல்

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

 



கொரோனா காலத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ‘டேட்டா சிம் கார்டு’ இலவசமாக வழங்கும் திட்டத்தில் ரூ.4.93 கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய தணிக்கைக்குழு 2022ம் ஆண்டிற்கான உயர் கல்வி துறையில் ேடட்டா சிம் கார்டு பயன்பாடின் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதில், ‘கொரோனா பெருந்தாெற்றின்போது கல்லூரிகளில் நடத்தும் இணைய வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்க வசதியாக, அன்றைய ஆளும் அதிமுக அரசு மாணவர்களுக்கு ‘டேட்டா சிம் கார்டு’களை இலவசமாக வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து அரசு மற்றும் உதவி பெறும் கலை கல்லூரிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங், சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 2021 ஜனவரியில் ‘இலவச டேட்டா சிம் கார்டு’ திட்டத்தை செயல்படுத்தியது. கொரோன காலத்தில் கல்வி நிறுவனங்கள் மூடிய நிலையில், ஆன்லைன் வகுப்பிற்காக டேட்டா சிம் கார்டு கொள்முதல் செய்யப்பட்டது. 


இதில், ரூ.4.93 கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது என இந்திய தணிக்கைக்குழு தெரிவித்துள்ளது. இதையொட்டி கல்லூரி கல்வி இயக்குனரகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க 6.12 லட்சம் சிம் கார்டு, தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 3.58 லட்சம் சிம் கார்டு என மொத்தம் 9.69 லட்சம் சிம் கார்டுகள் வாங்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. 2021 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 மாதத்துக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்க வேண்டும்.


இதற்காக எல்காட் நிறுவனம் கொள்முதல் முகமையாக நியமிக்கப்பட்டது. மார்ச் 2021-ல் எல்காட் நிறுவனத்திற்கு ரூ.43.16 கோடி நிதியை அரசு வழங்கியது. பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய 3 மாதங்களில் மாணவர்களுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டன. 


அதனை மாணவர்களுக்கு விநியோகம் செய்ய ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், ஏப்ரல் 2022 நிலவரப்படி வழங்கப்பட்ட 9 லட்சத்து 20 ஆயிரத்து 102 டேட்டா சிம் கார்டுகளில் கல்லூரி கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டில் 60 ஆயிரத்து 495ம், தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் 50 ஆயிரத்து 351 என 1 லட்சத்து 10 ஆயிரத்து 846 சிம் கார்டுகள் யாருக்கும் வழங்காமல் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கல்லூரிகளில் வைத்திருந்தனர். 


காரணம், ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாததால் சிம்கார்டுகள் வீண் ஆனது. இதனால், 4.93 கோடி ரூபாய் வீண் செலவானது.


அதாவது, தேவையை சரியாக மதிப்பிட தவறியதால் 1.1 லட்சம் சிம் கார்டுகள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு, 4 கோடியே 93 லட்சம் ரூபாய் தேவையில்லாமல் செலவானது. 


குறிப்பாக, இல்லாத மாணவர்களுக்கு மட்டுமே டேட்டா சிம் கார்டுகளை வாங்குவது மற்றும் மொபைலில் ஏற்கனவே டேட்டா இணைப்புகளை வைத்திருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் டேட்டா (2 ஜிபி) வழங்குவது என்ற முடிவைப் பின்பற்றாதது குறித்து விளக்கம் இல்லை. 


மாணவர்களுக்கு சிம் கார்டுகளை செயல்படுத்துவதை விநியோகம் செய்வதை உறுதி செய்யாமல் நெட்வொர்க் சேவை வழங்குநர்கள் (என்.எஸ்.பி) எல்காட் மூலம் கட்டணத்தை விடுவித்தல், அசல் டெண்டர்களை மாற்ற எல்காட்டின் விவேகமற்ற முடிவு மற்றும் கல்லூரி கல்வி இயக்குநரகம், தொழில் நுட்ப கல்வி இயக்குநரகத்தால் கண்காணிக்காதது ஆகிய காரணத்தால் 1.11 லட்சம் வழங்கப்படாத சிம் கார்டுகளைக் கொள்முதல் செய்வதற்கு ரூ.4.93 கோடி செலவினம் ஏற்பட்டுள்ளது. 


மேலும் ரூ.3.36 கோடியை ஓர் ஆண்டுக்கும் மேலாக அரசு கணக்கில் எல்காட் நிறுவனம் வைத்திருந்தது தவறான நிதி ஆளுமையை சுட்டி காட்டி உள்ளது. அந்த பணத்தை அரசு கணக்கில் செலுத்த உத்தரவிடவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நெட்வொர்க் சேவை வழங்குநர்கள் வழங்கிய டேட்டா கார்டுகள் மற்றும் செலவுகள்

நெட்வொர்க்

சேவைகள் கொள்முதல் ஆணை அளவு என்.எஸ்.பி வழங்கியது என்எஸ்பிகளுக்கு வழங்கப்பட்ட தொகை

பி.எஸ்.என்.எல் 54,984 54,984 237.72 லட்சம்

வோடோபோன் ஐடியா 1,04,169 55,228 239.68 லட்சம்

ஏர்டெல் 3,52,268 3,52,265 1,425.78 லட்சம்

ஜியோ 4,57,626 4,57,625 1,986.87 லட்சம்

மொத்தம் 9,69,047 9,20,102 3,890.05 லட்சம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent