இந்த வலைப்பதிவில் தேடு

விஜயதசமி - அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் - தொடக்க கல்வித்துறை

திங்கள், 23 அக்டோபர், 2023

 

விஜயதசமி நாளன்று அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மொத்தம் 2, 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தனியார் பள்ளிகளைப் போலவே ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன.


அந்த வகையில், செவ்வாயன்று விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்நாளில் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கினால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையால் பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent