இந்த வலைப்பதிவில் தேடு

கல்வி உதவி தொகைக்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் - பள்ளிகளுக்கு உத்தரவு

செவ்வாய், 24 அக்டோபர், 2023

 



கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்துக்கு, மாணவர்களின் குடும்ப வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான மாணவர்கள், தங்களின் ஜாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப வருமான சான்றிதழும் வாங்கி வர வேண்டும்.


கல்வி உதவி தொகையானது வரும் காலத்தில், மாணவரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதனால், மாணவரின் வங்கி கணக்கில், பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


இந்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, உரிய சான்றிதழ்களை மாணவர்களிடம் பெற்று, நவ.,15க்குள் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent