இந்த வலைப்பதிவில் தேடு

கல்வி அமைச்சர் கவனத்திற்கு செல்லுமா?

செவ்வாய், 17 அக்டோபர், 2023

 



கல்வி அமைச்சர் கவனத்திற்கு செல்லுமா ?

 கலைத் திருவிழா

 கலைஞர் நூற்றாண்டு விழா போட்டி

 அண்ணா பிறந்தநாள் போட்டி

பெரியார் பிறந்த நாள் போட்டி

வனத்துறை சார்ந்த போட்டி,

 தமிழ் திறனறித் தேர்வு சார்ந்த பயிற்சிகள்

 தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான போட்டி

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான போட்டி,

இன்னும் பல பதிவேற்றங்கள்..மன்றச் செயல்பாடுகள்....


இப்படியே காலையிலிருந்து மாலை வரை எண்ணற்ற  போட்டிகள் நடத்தி அதனை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அரையாண்டு . தேர்வுக்கு இன்னும் 40-க்கும் குறைவான வேலை நாட்கள் இருக்கும் நிலையில், மிக அதிகப்படியான பாடத்திட்டம் நடத்தப்பட வேண்டிய நிலையில் காலையிலிருந்து மாலை வரை அத்தனை செயலையும் செய்யச் சொல்லி சித்தரவதை செய்வது மிகக் கொடூரமானதாக உள்ளது. இது கற்றல் கற்பித்தலுக்கு எள்ளளவும் பயன் தராதது.


 சாப்பாட்டுக்கு ஊறுகாயா? ஊறுகாய்க்கு சாப்பாடா? என்ற நிலையில் திக்குத் தெரியாத திசையில் பிரேக் இல்லாத வாகனம் போல செல்லக்கூடிய எங்களது நிலை என்று மாறுமோ இந்த சாபக்கேடான சூழ்நிலை?

ஏற்கனவே பின் தங்கிய மாணவர்களுக்கு எந்த வகையிலும் முழு கவனம் செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை மிக வருந்தத்தக்கதாக உள்ளது.


பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் உள குமுறலாக ….. உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent