இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 05.10.2023 (World Teachers' Day)

புதன், 4 அக்டோபர், 2023

 



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்


குறள் :271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.


விளக்கம்:

ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.


பழமொழி :

Diamond cuts diamond


முள்ளை முள்ளால் எடு.


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :

மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக்கொள்வது. மகாத்மா காந்தி 


பொது அறிவு :

1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது?  

விடை: வேளாண்மை     


2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

விடை: ஆந்திரப்பிரதேசம்


English words & meanings :

 agronomics - கிராமப் பொருளாதார நூல்; database - கணினியில் சேமிக்கப்படும் தகவல்


ஆரோக்ய வாழ்வு : 

ரோஜா: ரோஜா இதழ்களை ஆய்ந்து ஒரு கையளவு எடுத்து பாத்திரத்தில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை குடித்துவந்தால் மலச்சிக்கல் விலகும்.


அக்டோபர் 05

உலக ஆசிரியர் தினம் 



நீதிக்கதை

 ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.


நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.


ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.


சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது...


"இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்" என்றது.


இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.


இந்த காட்டு நாய்


சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல்தப்பி சென்றுவிட வேண்டும் நினைத்து ஓசைப்படாமல்


பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.


அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு


சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.


எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.


குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய்,


சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்ததுஅதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.


"இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு, ''குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்காரு இரண்டு பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.


இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.


அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.


"அந்த போக்கிரி குரங்கு


எங்கேபோய் தொலைந்தது. அதனை


நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?" என்றது.


காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.


நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்.


இன்றைய செய்திகள் - 05.10.2023

*வேதியியல் நோபல் பரிசு: 3 நேனோ தொழில்நுட்ப சாதனையாளர்கள் வென்றனர்.


*அட்டகாச வடிவமைப்பில் அமர்க்களப்படுத்தும் இரவு நேர வந்தே பாரத் ரயில்களின் மாதிரி வடிவங்களின் படங்களை வெளியிட்டார்- இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.


*கேரளாவில் தொடர் மழை பெய்வதால் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.


*உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் 200 ரூபாயிலிருந்து 

ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்.


*ஆசிய விளையாட்டுப் போட்டி : டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


* ஆசிய விளையாட்டுப் போட்டி : குத்துச்சண்டையில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.


Today's Headlines

*Chemistry Nobel Prize: 3 nanotechnology achievers won.


 *Indian Railways Minister Ashwini Vaishnav released pictures of prototypes of Vanthe Bharat trains for night time with spectacular designs.


 *University exams postponed due to continuous rains in Kerala.


 *Subsidy under Ujjwala Scheme raised from Rs.200rs to 300rs - Union Minister Anurag Thakur.


 *Asian Games: Tamil Nadu player Ramkumar Ramanathan won silver medal in Tennis doubles category.


 * Asian Games: India won silver medal in boxing.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent