மாநிலம் முழுதும், 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், 24,000 தொடக்க பள்ளிகள்; 7,000 நடுநிலை பள்ளிகள், 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள். இவற்றில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், இன்னும் ஐந்து மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் விரைந்து கிடைக்க, இப்போதே அதற்கான பணிகளை துவங்க வேண்டும்.
நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வுக்கு பின், 10 ஆண்டுகள் வரை ஓய்வூதியம் கிடைக்காமல் நடையாய் நடக்கின்றனர். இந்த நிலையை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக