இந்த வலைப்பதிவில் தேடு

மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

ஞாயிறு, 5 நவம்பர், 2023

 



சிவகங்கையில் உள்ள மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலக கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததால் அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொடக்‍க கல்வி அலுவலகம் உள்ளது. கடந்த 1988 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்று வரை பராமரிப்பு செய்யப்படாததால் திடீரென மேற்கூரையில் உள்ள மேற்பூச்சு இடிந்து விழுந்தது. 


இந்த கட்டிடத்தில் புள்ளியல் துறை அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வேளாண் பொறியியல் துறை அலுவலகம் மற்றும் தொடக்க கல்வி அலுவலகங்கள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் திடீரென மேற்பூச்சு இடிந்து விழுந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent