பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் வரும் 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சேதுராமன் அறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1,660 பேர் சிறப்பு பயிற்றுனர் ஆசிரியர்களாக, 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, இந்தாண்டு ஜனவரியில், டி.பி.ஐ., வளாகத்தில் நான்கு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினோம்.
பின், செப்டம்பரில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது, மாநில திட்ட இயக்குனர் பேச்சு நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டோம்.ஆனால், எங்கள் கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.
எனவே, தமிழக அரசை வலியுறுத்தி, வரும், 4ம் தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக