தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாள்களும், முகூர்த்த நாள்களும் நெருங்குகின்றன. பலரும் வாங்கும் போனஸ் பணத்தை அப்படியே தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் காலமும் கூட.
அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டியது உங்கள் கடமை.
அவ்வாறு நாட்டில் தங்கம் வாங்கும் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணையமானது பிஐஎஸ் கேர் ஆப் என்ற கைப்பேசி செயலியை அறிமுகம் செய்திருக்கிறது.
இதன் வழியாக, ஐஎஸ்ஐ மற்றும் ஹால் மார்க் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை அடையாளம் காண உதவுகிறது.
அதன்படி, பிஐஎஸ் கேர் செயலியில், வெரிஃபை எச்ருஐடி என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, ஒருவர் தான் வாங்கும் தங்க நகையின் தரத்தை உறுதி செய்துகொள்ள முடியும். இந்த வாய்ப்பைக் கிளிக் செய்ததும், அதில் எச்யுஐடி எண்ணை பதிவு செய்யுமாறு கோரப்படும். நகையில் உள்ள 6 இலக்க எண்ணைப் பதிவு செய்து தேடுதல் என்பதை கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான், நகையின் பூர்வீகம் முதல், அதன் தரம் எவ்வளவு என்பது வரை அனைத்துத் தகவலும், நீங்கள் வாங்கிய நகை என்ன? அதற்கு ஹால்மார்க் தரச்சான்று பெறப்பட்டது எப்போது, நகையை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் யார் என்பது முதல் அனைத்துத் தகவல்களையும் பட்டியலிட்டுவிடும்.
14 காரட் முதல், ஆறு வகையான நகைகளின் தரத்தைக் இந்த செயலியில் கண்டுபிடிக்க முடியுமாம். எனவே, ஒருவர் வாங்கும் ஹால்மார்க், ஐஎஸ்ஐ முத்திரை மற்றும் சிஆர்எஸ் பதிவு முத்திரை ஆகியவை உண்மையானவையா என்றும், தங்க நகையின் காரட் எவ்வளவு என்றும் அறிந்துகொள்ள முடியும். ஒருவர் வாங்கும் நகையில் இருக்கும் தகவலை அடிப்படையாக வைத்தே இதனை அறிந்துகொள்ள முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக