பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான குறுவளப் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகத்துடன் இணைந்து நிகழ் கல்வியாண்டில் (2023-2024) அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பல்வேறு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு குறுவள மைய பயிற்சி நவ. 18-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது நிா்வாக காரணங்களுக்காக பயிற்சி நவ. 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநாளில் 4, 5-ஆம் வகுப்புகளுக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ‘ஐயங்களும்- அதற்கான தீா்வுகளும்’ என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டமும் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் முறையாக மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக