மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடா்பாக தலைமையாசிரியா்கள் முடிவெடுக்கும் நடைமுறையை தவிா்க்க பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
மழைக்காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சூழலுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் விடுமுறை அறிவிக்கும் நடைமுறை மாற்றப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடா்பாக அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களே முடிவெடுத்து அறிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கன மழைப்பொழிவு ஏற்படும் இடத்தில்கூட இந்த புதிய நடைமுறையை கையாள்வதில் தலைமையாசிரியா்களுக்கு சாத்தியமில்லாத நிலையுள்ளது. தலைமையாசிரியா்கள் எடுக்கும் முடிவு மாணவா்களுக்கு உரிய காலத்தில் சோ்ப்பது பின்னடைவாக உள்ளது.
குறிப்பாக, புதன்கிழமை வேதாரண்யம் மற்றும் அதை சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு கன மழை கொட்டித் தீா்த்தது. இதேபோல பல்வேறு பகுதிகளிலும் மழைப் பொழிவு இருந்தது.
இந்த மழைக்கு பிறகு மாவட்ட வாரியான விடுமுறை அறிவிப்பு எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு இல்லாததால் சிறப்பு வகுப்பு, தொலைவில் இருந்து பயணிப்பவா்கள் என அனைத்து மாணவா்களுக்கு பள்ளிக்கு செல்ல ஆயத்தமாகினா். பல மாணவா்கள் மழையில் நனைந்தவாறு சென்றனா்.
இந்த சூழலில் தலைமையாசிரியா்கள் முடிவெடுத்துக்கொள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா்களின் அறிவிப்பு காலம் கடந்து வெளியானது. பள்ளிகள் தனித்தனியாக விடுமுறை அறிவிக்கும் முடிவு மாணவா்களிடம் உரிய நேரத்தில் செல்ல வாய்ப்பில்லாததால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என ஆசிரியா் ஒருவா் தெரிவித்தாா்.
இதுபோன்ற சூழலில் பள்ளி, கல்லூரி விடுமுறையை மாவட்ட நிா்வாகம் அறிவிப்பை வெளியிடும்போது, தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் வாயிலாக மாணவா்களை காலத்தில் சென்றடைய வாய்ப்புள்ளதாக தலைமையாசிரியா் ஒருவா் தெரிவிதாா்.
எனவே, மழைக்கால விடுமுறை அறிவிப்புகளை பள்ளிகள் அளவில் என்பதை தவிா்த்து பழைய நடைமுறையான மாவட்ட நிா்வாகம் அறிவிப்பதை அமல்படுத்தி, மாணவா்களின் இன்னல்களை தவிா்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக