தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக லோகநாதன் பணியாற்றி வருகிறார்.
வேளாண் ஆசிரியராக பாலக்கோட்டைச் சேர்ந்த கிருஷ்ணன்(53) உள்ளார். இவர் பிளஸ் 1 , பிளஸ்2 மாணவர்களுக்கு வேளாண் பாடம் எடுத்து வருகிறார். நேற்று காலை இறை வழிபாட்டு கூட்டத்தில், மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் முன்பு, நேற்று முன்தினம் மாணவர்களுக்கு தேர்வு நடத்தியது பற்றி, வேளாண் ஆசிரியர் கிருஷ்ணனை தலைமை ஆசிரியர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த கிருஷ்ணன், திடீரென பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சக ஆசிரியர்கள் ஓடிச்சென்று, அவரை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீஸ் விசாரணையில், சில தினங்களுக்கு முன், வேளாண் ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியர் பரிந்துரை செய்துள்ளதால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக