தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தொடர்ந்து விடுமுறைகள் வருவதால், பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து, அக்டோபர் 9ஆம் தேதியும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டனர்.
இந்நிலையில், நிலையில் சமீபத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகை வர இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை எவ்வாறு முடிப்பது என்று ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், அதிகபட்சமாக 2 நாட்கள் மட்டுமே விடுமுறை இருக்கலாம என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக