இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 03.11.2023

வியாழன், 2 நவம்பர், 2023

 



திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை


குறள் :290

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.


விளக்கம்:

திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.


பழமொழி :

Every tide has its ebb


ஏற்றம் உண்டானால் இறக்கமும் உண்டு.


இரண்டொழுக்க பண்புகள் :


1. தற்பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.


2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.


பொன்மொழி :

விரும்பியதை அடைய எப்போதும் போராட வேண்டி இருக்கும்.. அந்த போராட்டம் தான் உன் விருப்பத்தின் மதிப்பை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும்.!”


பொது அறிவு :

1. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?

 அஸ்ஸாம்


2. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்-

 42,194


English words & meanings :

pail - bucket வாளி. pact - agreement ஒப்பந்தம் 


ஆரோக்ய வாழ்வு : 

மாம் பூ: உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடி செய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினமும் மூன்று வேளை பருகிவர வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல்  போய்விடும்.


நவம்பர் 03

அமர்த்தியா சென் அவர்களின் பிறந்தநாள்


அமார்த்ய குமார் சென் (Amartya Sen, பிறப்பு: நவம்பர் 3, 1933) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பொருளாதார அறிஞர் ஆவார். இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் 1999 இல் பாரத ரத்னா விருதும் பெற்றார். இவர் மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் பிறந்தார்


நீதிக்கதை

 இதில் எந்த பொம்மை நீங்கள்?                           


ஒரு நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? " இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார்.


சிற்பி ”இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு. நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன் ”இதில் என்ன விஷயம் இருக்கிறது” என்கிறார். முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி. கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.


சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது. சிற்பி ”மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்” என்கிறார். இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார். இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது. இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும்


அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார். பிறகு,


மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.


இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை. சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.


அப்போது இதில் ”யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்கிறார். என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார். அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது. மூன்றாம்


முறை வரவே இல்லை. சிற்பி நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான்


நம்பகமானவர்கள்”. அவர்களை முழுமையாய் நம்பலாம். எங்கு பேச


வேண்டுமோ அங்கு பேசி, எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்டு, எங்கு அமைதி காக்க வேண்டுமோ அங்கு அமைதி காப்பார்கள் என்று விளக்கம் கூறினார்.


நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று


பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும்.


இன்றைய செய்திகள் - 03.11.2023

*சென்னையில் வேக வரம்பை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் அறிவிப்பு.


*பிப்ரவரி 11இல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் - தேர்தல் ஆணையம்.


*தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு அறிவிப்பு.


*நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி வழிபாட்டு நெறிமுறைகள் வெளியீடு.


*தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: 4967 நிவாரண முகாம்கள் தயார்.


* சமி, சிராஜ் - இன் அமர்க்கள ஆட்டம்: இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.


Today's Headlines

*Penal notification for vehicles exceeding speed limit in Chennai.


 *Parliamentary General Election on February 11 - Election Commission.


 *Notification of time restriction for bursting firecrackers in Puducherry followed after Tamilnadu government.


 *Publication of practice guidelines for students on how to write NEET exam.


 *Precautionary measures to face monsoon in Tamil Nadu: 4967 relief camps are ready.


 * Shami, Siraj's awesome performance: India beat Sri Lanka by 302 runs.


 Prepared by

Covai women ICT_போதிமரம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent