இந்த வலைப்பதிவில் தேடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித் தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

வியாழன், 28 டிசம்பர், 2023

 



தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு: நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச.27 (இன்று) முதல்‌ ஜன.10-ம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவைமையங்களுக்கு சென்று இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறுபவர்கள், ஜன. 11, 12-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 11, 12-ம் வகுப்புக்கு ரூ.1000, பத்தாம்‌ வகுப்புக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கூடுதல் தகவல்களை www.dge.in.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்துகொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent