இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளியில் மரம் முறிந்து 16 மாணவர்கள் படுகாயம்

வியாழன், 14 டிசம்பர், 2023

 



மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத் தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மரத்தடியில் வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக மரம் வேரோடு சாய்ந்தது.


இதில், மரத்தடியில் அமர்ந்து பாடம் கவனித்துக் கொண்டிருந்த 16 மாணவர்கள் மர இடிபாடுகளுக்குள் சிக்கினர். உடனடியாக ஆசிரியர்களும், சகமாணவர்களும் அவர்களை பாதுகாப்பாக மீட்டனர். இருப்பினும் 16 மாணவர்களுக்கு படுகாயம் அடைந்தனர்.


படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக தெற்குத் தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent