வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்க உள்ளது.
கரையைக் கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக டிசம்பர் 4-ம் தேதி மாலை திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக