இந்த வலைப்பதிவில் தேடு

பேருந்துகளில் மாணவர்கள் தொங்குவதை தடுக்க போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை

செவ்வாய், 26 டிசம்பர், 2023

 



பேருந்துகளின் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டே பயணம் செய்வதை தடுப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சி கவனம் பெற்றுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிப்பது வழக்கமாகவே உள்ளது. 


சில நேரங்களில் கீழே விழுந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. இது குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், மாணவர்கள் சிலர் அதை கண்டுகொள்வது இல்லை.


இந்நிலையில், காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் நகர பேருந்துகளில் பட்டிக்கட்டுகளை ஒட்டி இருக்கும் ஜன்னல்கள் தகரம் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. 


இந்த சோதனை முயற்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் காஞ்சிபுரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள ஜன்னல்களை தகரத்தைக் கொண்டு மூடும் பணி நடைபெற்று வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent