பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டிருந்தது.
விடுமுறைக்கு பின், ஜனவரி2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று 33 ஆயிரம் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட உள்ளன.
இந்நிலையில் நேற்றய தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் பள்ளியில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். இதுதொடர்பாக போதிய அறிவுறுத்தல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக