அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் கிடையாது - குரூப் 4 ’ அறிவிக்கையில் தமிழக அரசு அறிவிப்பு.
காற்றில் கரைந்தது திமுகவின் தேர்தல் வாக்குறுதி...
பத்திரிகை செய்தி
தமிழக அரசில் பணியாற்றி வரும் ஊழியர்கள் முன்னதாக பழைய பென்ஷன் திட்டத்தை பெற்று வந்தனர். ஆனால் 2004 ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அறிவிப்பின்படி 2003 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பின்னர் பணியில் சேர்ந்த அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தின் பலன்களை மட்டுமே அனுபவிக்க முடியும் என்று அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக 20 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு விதமான போராட்டங்களும் அரசு ஊழியர்கள் தரப்பில் இருந்து நடத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு ஊழியர்கள் இடையே பழைய பென்ஷன் திட்டம் குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு பலமுறை தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான 2024 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிக்கையில் தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கிடையாது என்றும், ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டம் தான் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலமாக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை இனி நிறைவேற்ற வாய்ப்புகள் இல்லை என்று தெரிய வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக