பள்ளி மாணவனை தாக்கிய வழக்கில், வாலிபருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பண்ருட்டி அடுத்த சொரத்துார் காலனியை சேர்ந்த 18 வயது மாணவர் நெய்வேலி பள்ளியில் படித்து வந்தார். இவர், கடந்த 8.9.2021 அன்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
குண்டாங்குளம் அருகே சென்றபோது, பைக்கில் வந்த விருத்தாசலம் செடுத்தான்குப்பம் மனோஜ்குமார்,21; என்பவர், மாணவரை முன்விரோதத்தில் வழிமறித்து ஜாதி பெயரை கூறி தாக்கினார்.
இதுகுறித்து மாணவரின் தந்தை கொடுத்த புகாரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மனோஜ்குமாரை கைது செய்து, அவர் மீது கடலுார் மாவட்ட வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் வனராசு ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமராஜ், மாணவரை தாக்கிய மனோஜ்குமாருக்கு ரூ.3,500 அபராதம் விதித்தார். மேலும் மனோஜ்குமார் வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தில் குற்றவாளி இல்லை என அறிவித்தவரை விடுவித்து தீர்ப்பளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக