இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 24.01.2024

புதன், 24 ஜனவரி, 2024

 




திருக்குறள்:

பால்: பொருட்பால். 

இயல்: அரசியல். 

அதிகாரம்: கேள்வி.


குறள் 412:

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.


விளக்கம்:

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.


பழமொழி : 

Do unto others as you would wish to be done by others.



மன்னுயிரைத் தன்னுயிர்போல் நினை


பொன்மொழி:

“What you do today can improve all your tomorrows.” ~ Ralph Marston 


நீங்கள் இன்று செய்யும் செயல்களால் நாளைய நாட்களை மேம்படுத்த முடியும். - ரால்ப் மர்ஸ்டன்


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :

நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்


பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்


சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்


இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்


வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :

Cabbage - முட்டைக்கோஸ் 

Calf - கன்று 

Call - அழை 

Car - மகிழ்வுந்து

Camel - ஒட்டகம் 

Candy - மிட்டாய் 



ஆரோக்கியம்

சிட்ரஸ் பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. எலுமிச்சை, ஆரஞ்சு, நார்த்தங்காய், கீனூ மற்றும் சாத்துக்குடி என புளிப்பு சுவை கொண்ட பழங்களில் வைட்டமின் சி சத்து நிறைந்திருக்கிறது. சருமத்திற்குக் பொலிவூட்டும் இந்தப் பழங்கள் நமது செரிமாணத்தையும் சீராக்குகின்றன.


அசிடிடி (தேவைக்கு அதிகமான அமிலச் சுரப்பு) பிரச்சனை உள்ளவர்களுக்கு, சிட்ரஸ் பழங்கள் ஒரு சஞ்சீவினி என்றே சொல்லலாம். உலகின் எல்லா நாடுகளிலும் விளையும், ஆரஞ்சு பழத்திற்கு விஞ்ஞானிகள் கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 51.


இன்றைய சிறப்புகள்


ஜனவரி 24

1908 – பேடன் பவல் இங்கிலாந்தில் முதலாவது சிறுவர் சாரணப் பிரிவை ஆரம்பித்தார்.


1984 – முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் தனி மேசைக் கணினி அமெரிக்காவில் விற்பனைக்கு வந்தது.


1986 – வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது.


பிறந்த நாள் - நினைவு நாள் 


1965 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1874)


1966 – ஓமி பாபா, இந்திய இயற்பியலாளர் (பி. 1909)


சிறப்பு நாட்கள்

இணைப்பு நாள் (ருமேனியா)

தேசிய பெண் குழந்தை நாள் (இந்தியா)


நீதிக்கதை

முரடனுக்கு அறிவுரை கூறாதே

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.



அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.


மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  


அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….


இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.


பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.


துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.


நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.


இன்றைய முக்கிய செய்திகள் 24-01-2024 


கொரோனாவை விட கொடூரமான ‘டிசீஸ் எக்ஸ்’ என்ற நோய் பரவுகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை...


தமிழ்நாட்டில் சூரியசக்தி மின்னுற்பத்தியை அதிகரிக்க சலுகை: மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவிப்பு


தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 4 சதவீதம் உயர்த்தியது ஒன்றிய அரசு


நாட்டிலேயே முதல்முறை… மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது தமிழக அமைச்சரவை



உயர்கல்வித் துறை சார்பில் ரூ.96.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்வி சார் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு


கோவையில் பிளஸ் 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த நபர் கைது


Today's Headlines: 24-01-2024

'Disease X' is spreading worse than Corona: World Health Organization warns... 


Offer to increase solar power generation in Tamil Nadu: Power Generation and Distribution Corporation announces... 


The Union Government has increased the import duty on gold and silver jewelery by 4 percent. For the first time in the country... 


the Tamil Nadu cabinet has approved the state women's policy...


Chief Minister M. K. Stalin inaugurated the educational buildings constructed at a cost of Rs. 96.75 crore on behalf of the Higher Education Department... 


Announcement of Bharat Ratna award to late former Bihar Chief Minister Karpuri Tagore... 


A person who studied Plus 2 in Coimbatore and taught English medicine to the public was arrested



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent