தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக