மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்கும் பணிகளை நாளை முதல் அந்தந்த பள்ளிகளிலேயே மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், எல்காட் நிறுவனத்தின் 770 கருவிகளைக் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், அரசின் சலுகைகள் மற்றும் உதவிகளைப் பெற பயனுள்ளதாக இருக்கும் என்பதால், ஆதார் பதிவை கவனமாக மேற்கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆதாருக்காக எந்தக் குழந்தையும் பள்ளியை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக