தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு முன்கூட்டியே மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதால், பள்ளி சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து ஜுன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக