இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி மாணவன் கார் மோதி பலி

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

 

சாலையை கடக்க முயன்ற, 10ம் வகுப்பு மாணவன் கார் மோதி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலுார் மாவட்டம், ராயம்புரம் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் மகன் வாசன்,15, இதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்,16, 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் மாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து கடைவீதிக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.


அப்போது, ஜெயங்கொண்டத்திலிருந்து கீழராயம்புரம் கிராமத்துக்கு குலதெய்வ கோவிலுக்கு திருமண பத்திரிக்கை படைப்பதற்காக காரில் சென்றுக்கொண்டிருந்த ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ராகுல்,35, என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் இருவரும் மீதும் மோதியது. இதில், வாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டன் படுகாயமடைந்து அரியலுார் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


இத்தகவலறிந்த, ராயம்புரம் கிராம மக்கள் விபத்து ஏற்படுத்திய கார் கண்ணாடியை அடித்து உதைத்தனர். பின்னர், செந்துறை-அரியலுார் சாலையில் மாணவன் வாசனின் சடத்தை வைத்து, சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த, செந்துறை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent