இந்த வலைப்பதிவில் தேடு

School Morning Prayer Activities - 09.02.2024

வியாழன், 8 பிப்ரவரி, 2024

 



திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : மெய்யுணர்தல்


குறள்:353

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து.


விளக்கம்:

சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.


பழமொழி :

Money makes the mare go

பணமென்றால் பிணமும் வாயை திறக்கும்


இரண்டொழுக்க பண்புகள் 

1.என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.


2.பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.:1


பொன்மொழி :

எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது. --மகாத்மா காந்தி


பொது அறிவு :

1. உலகிலேயே  ஆழமான ஆழி எது?

விடை: மரியானா ஆழி


2. உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?

விடை: ரப்லேசியா அர்னால்டி



English words & meanings :

 xenie-foreigner", "outlander". xerotic- abnormally dry skin or membrane


ஆரோக்ய வாழ்வு : 

கோவை கீரை : கோவைக்கீரையை அரைத்து உடலில் பூசி குளித்து வர உடல் குளிர்ச்சியடைவதோடு வெயிலால் உண்டாகும் அதிகப்படியான வியர்வைத் தடுக்கும். வேர்க்குரு பிரச்சினைகள் ஏற்படாது.


நீதிக்கதை


 கழுதை நாயானால்

ஒருவரிடம் ஒரு கழுதையும் அழகான நாய்க்குட்டியும் இருந்தன. கழுதை வீட்டிற்கு வெளியே கொட்டிலில் கட்டப் பட்டிருக்கும். அதற்கு நிறையத் தீவன வகைகள் வழங்கப்படும்.


ஆனால், அந்த நாய்க்குட்டியோ வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வரும். அதற்கு நிறைய வித்தைகள் தெரியும். ஆகவே, எஜமானர் அந்த நாயிடம் அன்பாக இருந்தார். அதை விட்டு விட்டு அவர் சாப்பிடவே மாட்டார். அப்போதெல்லாம் அந்த நாய் துள்ளும், குதிக்கும், எஜமானரைக் கொஞ்சும் இதெல்லாம் பார்க்க அழகாக இருக்கும்.


அந்த நாயைப் பார்க்கிற போதெல்லாம் கழுதைக்குப் பொசு பொசு என்று இருக்கும். "தன் தலை எழுத்தை எண்ணிப் புலம்பும். "காட்டிலிருந்து விறகு கொண்டு வருவது நான்; செக்குச் சுற்றுவது நான்; தோட்டத்திலிருந்து விளைச்சலைச் சுமந்து வருவது நான். என்றைக்காவது வீட்டிற்குள் நுழைய முடிந்திருக்கிறதா ? அந்த எஜமான் தான் அன்பாக ஒரு வார்த்தை பேசியதுண்டா?" எனப் பொருமும்.


இப்படியே பொருமிக் கொண்டிருந்த கழுதை ஒருநாள் கட்டுகளை முறித்துக் கொண்டு வீட்டிற்குள் பாய்ந்தது.


கால்களை அப்படியும் இப்படியுமாகத் தூக்கிக் கொண்டு துள்ளியது; குதித்தது. அந்த நாய்க்குட்டி எஜமானர் மடியில் தவ்வி ஏறுவது போல் தாவ முயன்றது. அதனால் மேஜை உடைந்து அதிலிருந்து பாத்திரங்கள் கீழே விழுந்து நொறுங்கின. நாயைப் போல் முத்தம் கொடுக்க விரும்பி எஜமானின் முதுகுப் பக்கத்தில் எழும்பியது.


அதற்குள், வீட்டிற்குள் கழுதை அட்டகாசம் செய்கிறது  அறிந்த வேலைக்காரர்கள் கழுதையிடமிருந்து எஜமானைக் காப்பாற்றினார்கள். சாட்டை, தடி ஆகியவற்றைக் கொண்டு கழுதையை அடித்து விரட்டிக் கொட்டிலில் கட்டி வைத்தார்கள். உயிர் போகிற மாதிரி அடித்துத் துவைத்தார்கள். "இதெல்லாம் என்னால் வந்த வினை. வழக்கம் போல உழைத்துக் கொண்டிருக்காமல் ஏன் நான் ஒன்றுக்கும் உதவாத சிறு நாய்க்குட்டி போல சோம்போறியாக இருக்க ஆசைப்பட்டேன்" என அது புலம்பியது.


நீதி : பொறாமை கொண்டவர்களுக்கு என்ன கதி கிடைக்கும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு, பெருமை இருக்கவே செய்கிறது. இதில் அவரைப் போல் இல்லையே இவரைப் போல் இல்லையே எனப் பொறாமை கொண்டால் இப்படித் தான்.


இன்றைய செய்திகள் - 09.02.2024


*34 சப் கலெக்டர்கள் இடமாற்றம்; 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு.


*ரூபாய் 816 கோடி மதிப்பீட்டில் சோளிங்கநல்லூர் தொகுதியில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகள் தொடக்கம்.


*உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரலில் முழு செயல்பாட்டுக்கு வரும்-அமைச்சர் 

மா. சுப்பிரமணியன்.


*மூன்று வகை கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன்: ஐசிசி தரவரிசையில் பும்ரா உலக சாதனை.


*சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சித் டிராபி போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.


Today's Headlines

* 34 Sub Collectors are Transferred and 29 Tahsildars are promoted as Sub Collectors.


 * The work of laying the primary drinking water  pipe in Cholinganallur block with an estimate of Rs 816 crore has started.


 *Udagai Govt Medical College Hospital will become fully operational in April by Minister Ma. Subramanian.


 *Number one in all three types of cricket: Bumrah made a world record in ICC rankings.


 * Spectators are free to watch the Ranjith Trophy match to be held at the Chepakkam Stadium in Chennai.


 Prepared by

Covai women ICT_போதிமரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent