இந்த வலைப்பதிவில் தேடு

மார்ச் 12 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

வெள்ளி, 8 மார்ச், 2024

 



கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடைவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


10ஆம் திருநாளில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெறுகிறது. அதேநாள் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்குபூஜை நடைபெற உள்ளது.


திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்கேரளத்தைச் சேர்ந்த பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்குச் செல்வதால், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை எனப் போற்றப்படுகிறது.


இக்கோயிலில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி மார்ச் 12ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent