இந்த வலைப்பதிவில் தேடு

கணித தேர்வில் எளிதாக சென்டம் பெறலாம் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து

வியாழன், 21 மார்ச், 2024

 

பிளஸ் 2 கணிதத்தேர்வில் வினாக்கள் எளிதாக கேட்கப்பட்டிருந்ததால் நன்றாக படித்த மாணவர்கள் எளிதாக சென்டம் பெறலாம். சராசரி மாணவர்களும் 70 மதிப்பெண் பெறலாம் என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறுவர்


ப.முருகன், கணித ஆசிரியர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: 


நீண்ட வருடங்களுக்குப்பிறகு வினாத்தாள் மிக எளிதாக அமைந்துள்ளது. அதிக கவனம் செலுத்தி படித்த மாணவர்கள் இத்தேர்வில் சென்டம் எடுப்பது உறுதி. மற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வாய்ப்பு அதிகம். ஒரு மதிப்பெண் வினாவில் 17 வினாக்கள் பயிற்சி வினாக்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று வினாக்கள் பயிற்சி செய்து விடையளிக்கும் வகையில் இருந்தது.3 மதிப்பெண் வினாக்களில் ஒரு கட்டாய வினா மட்டும் கிரியேட்டிவ் வினாவாக அமைந்திருந்தது. அதுவும் எளிதாக தீர்வு காணும் வகையில் இருந்தது. இந்த தேர்வில் நன்றாக பயிற்சி செய்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.


சென்டம் எடுக்க வாய்ப்பு

ஜெ.எஸ்.டிம்பிள், கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி:

90 மதிப்பெண்களுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 20ம் எளிமையாக விடையளிக்கும் படி கேட்கப் பட்டு இருந்தது. அப்பகுதியில் 17 வது வினா புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிமையாக விடையளித்தேன். மூன்று மதிப்பெண் வினாக்களில் 40 வது வினா கருத்தியல் அடிப்படையில் யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது.5 மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்த, மீண்டும், மீண்டும் படித்த வினாக்களாக வந்ததால், மாணவர்கள் எளிதாக சென்டம் பெறலாம். நான் 85 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.வினாத்தாளை பார்த்தவுடன் மகிழ்ச்சி


ஆர்.ப்ரித்திராஜி, நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கம்பம்:


கணித தேர்வில் வினாக்கள் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் 20 வினாக்களில் ஒன்றிரண்டு சிரமம். மற்ற வினாக்கள் எளிதாக இருந்தது. பாடப்புத்தகத்தில் இருந்தே வினாக்கள் கேட்டிருந்தனர். சராசரி மாணவர்களும் தேர்ச்சி பெறும் அளவிற்கு எளிதாக இருந்தது. பள்ளியில் எழுதிய திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களே பெரும்பாலும் கேட்கப்பட்டது. கணித தேர்விற்கு பயந்து சென்றோம். ஆனால் வினாத்தாளை பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. 90 மதிப்பெண் வினாக்களில் அனைத்திற்கும் விடை எழுதியுள்ளேன். 75 மதிப்பெண் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. கட்டாய வினாக்களும் எளிது


கே.ஆகாஷ், எஸ்.கே.ஏ., மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி: 


எதிர்பார்ப்பை விட கணித தேர்வுக்கான வினாத்தாள் மிக எளிதாகவே இருந்தது. 


நூறு மார்க் எடுப்பதும் எளிது. சராசரி மாணவரும் 70 மதிப்பெண் எடுக்கலாம். கணித பாடத்தில் பெயிலாகும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. 1, 2, 3, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே எளிதாக இருந்தது. புத்தகத்தின் பின்புறம் உள்ள வினாக்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. சரியான முறையில் பயிற்சி எடுத்திருந்தால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். 


2, 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினாக்களும் எளிதாகவே இருந்தது. பாடத்திற்கு அப்பாற்பட்டோ, கடினமான வகையிலோ வினாக்கள் இடம் பெறவில்லை. கணிதத்தேர்வு எளிதானதால் அதிகமாக பெறும் மதிப்பெண்கள் உயர்கல்விக்கு செல்ல உதவும்.எதிர்பார்த்த வினாக்கள் அதிகம் வந்தது


வி.சோபியா, என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, கூடலுார்: 


ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்கள் மிக எளிது. கட்டாய வினாக்கள் சொந்தமாக யோசித்து எழுதக்கூடிய வகையில் இருந்தாலும் எளிதாகவே இருந்தது. புத்தகத்தின் பின் பகுதியில் இருந்து கூடுதல் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் அனைத்தும் பதில் எழுதுவதில் சிரமம் இல்லை. மொத்தத்தில் எளிதாக சென்டம் பெறலாம். சுமாராக படிக்கும் மாணவர்கள்கூட 70 மதிப்பெண் பெற முடியும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent